உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பி.ஆர்.எஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
அத்துடன், அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில் முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக கலாநி.எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகமவின் நியமனத்துக்கும், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக எஸ்.சி.ஜே.தேவேந்திரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாந்து மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவராக எம்.ஜே.சூசைதாசன் ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇