மீன்களின் விலை அதிகரிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களைக் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் படி, தற்போதைய மோசமான வானிலை மற்றும் பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அதிகமான கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை எனவும் இதன் விளைவாக மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் ஹட்டனில், தலபத், கொப்பரா ஆகிய மீன்களின் ஒரு கிலோ சில்லறை விலை, 3,200 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன் விலை உயர்வு இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்றும், இதற்கு இணையாக குளத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects