யால தேசிய பூங்காவில் இனி சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதி இல்லை – வனவிலங்கு திணைக்களம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

யால தேசிய பூங்காவில் இனி சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதி இல்லை யால தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான சபாரி ஜீப் வண்டிகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் நிராகரித்துள்ளது.

அதிக கூட்ட நெரிசல் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால் அதிக எண்ணிக்கையிலான சபாரி ஜீப் வண்டிகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், பூங்காவிற்குள் தற்போது சுமார் 500 ஜீப் வண்டிகள் இயங்குகின்றன, மேலும் 175 கூடுதல் வாகனங்களைச் சேர்க்கச் செயல்பாட்டாளர்கள் அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதிகரித்த வாகன செயல்பாடு விலங்குகளுக்குக் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வனவிலங்கு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects