இன்று (14) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சுகவீன விடுமுறையை அறிவித்து சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களின் சேவையை அரசியலமைப்பில் அங்கீகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 2 நாட்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇