ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில்  ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , ஹீத்ரோவுக்கான  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் , இன்று (21.03.2025) பகல் 12:50 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள்  UL 503 (கொழும்பு – லண்டன் வரை) மற்றும்  இரவு 20:40 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த UL 504 (லண்டன் – கொழும்பு வரை) ஆகியவை இயக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் , பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறோம். ஹீத்ரோ மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்” என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தை 1979 (இலங்கைக்குள்), +94117 77 1979 (சர்வதேசம்) அல்லது +94744 44 1979 (வட்ஸ்அப் ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாற்றாக, அவர்கள் அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects