இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரன் தன்வசப்படுத்தியுள்ளார்.
கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் செயின்ட் கிட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்
இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நிக்கோலஸ் பூரன் 138 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
முன்னதாகக் குறித்த சாதனை க்றிஸ் கெய்ல் வசமிருந்தது.
அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 135 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
இந்தநிலையில் க்றிஸ் கெய்லின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇