தேசிய பராஒலிம்பிக் சங்கத்தினால் வைகாசி மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஹோமாகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வன் குளோரியன் ஹேமேந்திரா தேசிய ரீதியில் இரு தங்கப்பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சிறு வயது முதல் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் 17 வயதான செல்வன் குளோரியன் ஹேமேந்திரா நீச்சல், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர் என்பதுடன் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டெறிதலில் தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கத்தை பெற்றிருந்தமையும் குறிப்பிடதக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇