பிம்ஸ்டெக் சுகாதார முதலாவது மாநாட்டின் தலைவராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தேர்வு!

பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது மாநாட்டின் தலைவராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று (11.11.2026) முற்பகல் கொழும்பில் ஆரம்பமான இம்மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, பிம்ஸ்டெக் பிராந்தியத்தின் சுகாதார ஒத்துழைப்பு தொடர்பில் முதன்மையான தலைமைத்துவப் பொறுப்பு நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் இம்மாநாட்டில் பிராந்திய பொதுச் சுகாதார பாதுகாப்பு, தொற்றுநோய் கட்டுப்பாடு, சுகாதார அவசர நிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, அத்துடன் சுகாதாரத் துறையிலான தொழில்நுட்பம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

இம்மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், பிராந்திய சுகாதாரக் கொள்கைகள் தொடர்பான உரையாடல்களை வழிநடத்துவதற்கும் கூட்டு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குவதற்குமான முக்கிய பொறுப்பும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

மேலும், 2025 ஒக்டோபர் மாதம் கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) 78 ஆவது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுக் கூட்டத் தொடரில், அவ்வமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத் தலைவராகவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டிருந்தார்.

2026 ஒக்டோபர் மாதம் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்ற 5ஆவது ஆசிய – பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (UNESCAP MC-5) உப தலைவராகவும் அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects