சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் மற்றும் மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த வீதியில் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா ஹங்குராங்கெத்தை ஹோப் தோட்டத்தில் 13 குடும்பங்ளைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக குறித்த தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பில் வசித்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆலயம் ஒன்றிலும், உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇