பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்ற தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டியில் ( National Masters & Seniors Athletics) இலங்கை சார்பில் கலந்துக்கொண்ட அகிலத்திருநாயகி இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
75 வயதான இவர் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தராவார்.
இப்போட்டியில் 1500m ஓட்டப்போட்டி, 5000m விரைவு நடைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 02 தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கத்தையும், 5000m ஓட்டப் போட்டியில் பங்குப் பற்றி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இப்போட்டிகளில் இவர் வெறுங்காலுடன் கலந்து கொண்டு இச்சாதனைகளைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… )