எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டியூக் வெக்சின் என்ற நிறுவனமே இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது
குறித்த தடுப்பூசி மூலம் உடலில் புகுந்த எச்.ஐ.வி வைரஸை அடையாளம் கண்டு பலவீனப்படுத்த முடியும் என டியூக் வெக்சின் நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசிக்குப் பிறகு உடலில் புதிதாக உற்பத்தி செய்யப்படும் Antibodies இனால் இந்த மாற்றம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி தற்போது பரிசோதனை மட்டத்தில் காணப்படுவதாகவும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇