மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 29. 05.20224 அன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தின் 2ஆவது மின் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும் ,வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇