நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த மாதம் வரை 24,920 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 2,647 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇