சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா- எல் 1 விண்கலம் 06.01.2024 அன்று அதன் எல் 1 புள்ளியை அடைய உள்ளதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரோவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா எல் 1 06.01.2024 இறுதி சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆதித்யா எல் 1 விண்கலம், அதன் இலக்கை அடைந்து நாளை மாலை அதன் இறுதி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டு தமது இறுதி இலக்கை அடைந்ததும் , கிரகங்கள் இல்லாமல் சூரியனைக் காண முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் , பூமியை நான்கு முறை சுற்றும் ஒத்திகைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇