எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாள் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால், ஜூன் மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த விடுமுறை தினங்களுக்கு பதிலாக இம் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இம் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










