ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் அவருடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் டிசெம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி , இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇