கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஆணழகன் தேகக் கட்டமைப்பு விருத்திப் போட்டி 03.06.2024 அன்று இப்போட்டி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விளையாட்டு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இப் போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இருந்து சுமார் 50 இற்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் மிஸ்டர் ஈஸ்டன் பட்டத்தை திருகோணமலையை சேர்ந்த எஸ்.சரசு ராஜன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மை.டியனும், மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.எம்.சப்ராஸ் கடினமான போட்டிகளில் மத்தியில் வெற்றி வாகை சூடி வெற்றிக் கிண்ணங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
நடைபெறவிருக்கும் 49வது தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியை இவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் யு.சிவராஜா, கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் விளையாட்டிற்கான உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், மட்டக்களப்பு மாவட்ட ஆணழகன் கட்டமைப்பு சங்கத்தின் செயலாளர் கே.ரொனி பிரின்சன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், வெற்றியாளர்களுக்கான வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇