ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக இன்றும் (06.09.2024) இடம் பெறவுள்ளது.
இன்றையதினம் (06.09.2024) சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
இதுதவிர, முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை அஞ்சல் மூலம் வாக்களிப்பு நடைபெறும் என்பதால், அதற்கான வசதிகளை பணியிடங்களில் ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇