10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, அயகம, பெல்மதுல்லை, குருவிட்ட, எஹெலியகொட, இரத்தினபுரி, நிவித்திகல, கிரியெல்ல மற்றும் கலவானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, மத்துகமை, பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇