மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை 24ஆம் காலாட்படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேரா மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அம்பாறை மல்வத்த 24ஆம் இராணுவ காலாட்படை பிரிவுக்கு புதிய இராணுவ அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் உத்தியோக பூர்வ விஜயத்தை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் சமய தலைவர்களையும், அரச அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் இதன் ஒரு உத்தியோக பூர்வ சந்திப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
கலந்துரையாடலின் போது மாவட்டத்தின் அபிவிருத்தி, பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா இதன் போது அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇