அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு இன்று (07.06.2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹோமாகமை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரனை மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத்த மற்றும் அயகம ஆகிய கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்புரி முகாம்களாகச் செயற்படும் பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகள் வழமைபோன்று செயற்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇