கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 497 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால், பொது மக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇