மண்முனை வடக்குப் பிரதேச நலன்புரிச் சங்கம் நடத்திய ஒளிவிழா மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் 07.12.2023 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மேலும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அருட்பணி ராஜரெட்ணம் அடிகளார் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்வில் மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇