15 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வங்கி அட்டைகள் மற்றும் பணத்துடன் காணாமல் போன பணப்பை உரிமையாளரிடம் கையளித்து நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்கிய ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான வாரண்ட் அதிகாரி ஆர்.யு.செனவிரத்னவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேரடியாக பாராட்டினார்.
அண்மையில் கொழும்பு இருந்து ஹொரணை நோக்கி பயணித்த பேருந்தின் உரிமையாளரிடம் காணாமல் போன பணப்பையை வழங்கி நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கிய இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியை விமானப்படை தளபதி மதிப்பீடு செய்து அவரை விமானப்படை தலைமையகத்திற்கு அழைத்து சிநேகபூர்வமான கலந்துரையாடலின்பின்பு பாராட்டி நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவப்படுத்தினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇