காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுற்றாடல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. காத்தான்குடி ஆற்றங்கரை மைதானத்தின் நீர் வடிந்தோடும் பகுதிகளில் மதுரை மரங்களை நடும் நிகழ்வும் சுற்றாடல் தினக் நிகழ்வும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் இன்று (07) வாவிக்கரை குபா மைதானத்தில் இடம்பெற்றது.
“நிலமீட்பு, பாலைவனமாக்கள் மற்றும் வரட்சியைத் தாங்கும் தன்மை” என தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனடிப்படையில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு இவ்வாரம் முழுவதும் சிரமதானம், மரநடுகை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் போன்ற விழிப்புனர்வு நிகழ்வுகள்என பல வேலைத்திட்டங்கள் காத்தான்குடிப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடரிலேயே சுற்றாடல் வார இறுதிநாளாகிய இன்று பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புனர்வூட்டும் வகையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தினக் கொண்டாட்டம் ஆகியன நிகழ்வுகள் வாவிக்கரை மைதானத்தில் நடைபெற்றது.
ஓக்சி காடன் சுற்றுச்சூழல் பசுமைக் கழகத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பொதுமக்களுக்கான விழிப்புனர்வு கருத்துரைகளை பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. எம்.எஸ். சில்மியா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வாவிக்கரைக்குப் பொருத்தமன மதுரை மரங்கள் மற்றும் அத்தி மரம் என்பன நடுகை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. எஸ். தனுஜா, கிராம சேவை உத்தியோகத்தர் களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜறூப், சமுர்த்தி திட்ட முகாமையாளர் திருமதி. எஸ். கண்ணன், கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சுற்றுச் சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். விக்னேஸ்வரன், ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக்கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம். கமால்தீன், செயலாளர் எச்.எம். றியாஸ் உட்பட அதன் உறுப்பினர்கள், ஜாமிஉல்லாப்ரீன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇