முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டானில் விவசாய கள உதவியாளர் பயிற்சி நெறியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே இரண்டு அணியினர் பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறி விவசாய கள உதவியாளராக பணியாற்றி வருகின்றனர்.
இந்த கற்கைநெறியானது திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய பயிலுனர் பயிற்சி அதிகாரசபையின் கீழ் முழுநேரமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது மூன்றாவது அணிக்கான பயிற்சி நெறி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி நெறியில் விண்ணப்பிக்க தகுதியுடையோர் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். வயதெல்லை 18 – 30 இற்குள் இருத்தல் வேண்டும்.
கா.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர்களும், பல்கலைக் கழகத்திற்கான அனுமதி கிடைக்காதவர்களும் விண்ணப்பிக்க முடியும். முல்லைத்தீவு மாவட்டத்தினை வதிவிடமாக கொண்டவராக இருப்பின் நன்று. ஏனைய மாவட்டத்தினை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
(இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
- பண்ணை முகாமையாளர் – 0772717509
- மாவட்ட விவசாய பயிற்சி நிலைய அலுவலகம் – 0212061760
- பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் – 0212290006)
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇