காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.அதாவுல்லா தலைமையில் 13.06.2024 அன்று இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதரின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யது அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
காணி, கல்வி, மீன்பிடி, மின்சார சபை, நீர் வழங்கல், நகர சபை, கால்நடை, போக்குவரத்து, சுகாதாரம், வைத்தியசாலை, வீதி அபிவிருத்தி, கட்டடம், சட்ட விரோத கட்டடம் போன்ற முக்கிய துறைகள் இதன்போது எடுத்துக்கொள்ளப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செய்யது அலிஸாஹிர் மௌலானா மற்றும் ஏ.எல்.அதாவுல்லா ஆகியோரினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியூடாக பொது நிறுவனங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇