யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் சந்தர்ப்பங்களில் பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் சந்தர்ப்பங்களில் கனரக வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றமை தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, போட்டித் தன்மையுடன் பேருந்துகளை செலுத்தும் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகள் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇