மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டம் – 2025

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.06.2025 அன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ரீ.சுந்தரேசனின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், உதவிப் பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இதன் போது மாவட்டத்தில் மிகவும் பாரிய பிரச்சனையாக திகழும் திண்ம கழிவகற்றலில் காணப்படும் சவால்கள் மற்றும் சாதக பாதக தன்மைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், சட்டவிரோத மணல் அகழ்வு, யானை மனித மோதல் உள்ளிட்ட மாவட்டத்தில் நிலவும் மேலும் பல பிரச்சனைகள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது அத்துடன் பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்பட்டு, சில பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான ஆலோசனைகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects