சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றும் (26.11.2024) நாளையும் (27.11.2024) g விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியைக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த விடுமுறை வழங்கப்படுவதாகக் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇