மலையக மார்க்கத்தில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் நேற்று (13.06.2024) அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
நேற்று (13.06.2024) மாலை 3.25 மணியளவில் குறித்த ரயிலின் காட்சிக் கூட பெட்டி தடம் புரண்டது. இதனையடுத்து, இரவு 10 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (14.06.2024) அதிகாலை 5.55 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி உடரட்ட மெனிக்கே ரயில் பயணித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.