பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை உறுதிப்படுத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2010ஆம் ஆண்டில், பூமி உட்புறத்தின் சுழற்சி வேகம் குறைய ஆரம்பித்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

பூமிக்கு கீழே 4,800 கிலோ மீற்றர் ஆழத்தில் வெப்பமும் அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று சுழன்று கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் முன்னரே கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலைமையால் உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் ஊகிப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects