உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கை வரவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇