கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையும் சீனாவும் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராஜதந்திர ஆலோசனை சந்திப்பொன்றின் போது கலந்துரையாடியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான 13ஆவது சுற்று தூதரக ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வீடோங் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
அண்மைய ஒத்துழைப்பு செயற்பாடுகள், பொருளாதாரம், வர்த்தக மேம்பாடு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை இரு தரப்பினரும் இதன்போது ஆராய்ந்துள்ளனர்.
சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇