நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (13.03.2024) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், (முட்டைகோஸ்) கோவா 425 ரூபாவாக விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நுவரெலியா கரட் கிலோ ஒன்றின் விற்பனை விலை 395 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல லீக்ஸ் 210 ரூபா, ராபு 80 ரூபாய், பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 270 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உருளை கிழங்கு (வெள்ளை) 355 ரூபாவாகவும், உருளை கிழங்கு (சிவப்பு) 375 ரூபாவாகவும், நோக்கோல் 170 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் அதிக உச்ச விலை கண்ட நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக சரிவு கண்டுள்ளது.
அந்தவகையில் தக்காளி (பச்சை) 800 ரூபாவாகவும், கறிமிளகாய் 555 ரூபாவாக மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், சிவப்பு கோவா 2100 ரூபாவாகவும், காலிஃப்ளவர் (நுவரெலியா) 650 ரூபாவாகவும், புரக்கோலி 550 ரூபாவாகவும் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇