பொசன் போயா தினத்தை முன்னிட்டு 20 ஆம் திகதியிலிருந்து 24 மணிநேர விசேட பஸ் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்தார்.
அநுராதபுரம், தந்திரிமலை மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த விசேட பஸ் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, பொசன் போயா தினத்தை முன்னிட்டு 400 பஸ்கள் பொதுமக்கள் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇