ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற தர்ஷன் செல்வராஜா, பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையைப் பெற்றவர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரான்ஸின் பரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் கடந்த ஆண்டுக்கான விருதை வென்றிருந்தார்.
இவருக்கு இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇