நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏனையோருக்கு, இணையம் ஊடாக விசா வழங்கல் இடம்பெறாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்குள் பிரவேசிக்கும் போதே விசா வழங்கும் பணியிலிருந்து விஎஃப்எஸ் குளோபல் நிறுவனத்தை நீக்கி, விமான நிலையத்தில் பழைய முறைப்படி விசா வழங்குமாறு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
எவ்வாறாயினும் பழைய முறைக்கு விசா வழங்கும் நடைமுறை இன்னும் ஆரம்பிக்கப்படாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இணையம் ஊடாக விண்ணப்பித்த பயணிகள் விமான நிலையத்தில் விசாவை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக விமான நிலையத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇