இருதரப்பு கடன்களை மீள செலுத்துவதற்கான காலஅவகாசத்தை இலங்கை இன்று பெறவுள்ளது.
இந்தியா சீனா பாரிஸ்கிளப் நாடுகளுடன் இலங்கை இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது தனது இருதரப்பு கடன்களை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை பரிஸ்கிளப் நாடுகள் இந்தியா சீனாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சமமான நிபந்தனைகளின் அடிப்படையில் கடனை அடைப்பதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.
37 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனில் 28.5 வீதத்தினை இருதரப்பு கடன்வழங்குநர்களிற்கு இலங்கை வழங்கவேண்டிய நிலையில் உள்ளதை அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சீனாவிற்கு 4.66 பில்லியன் டொலர் ஜப்பானிற்கு 2.35 பில்லியன் இந்தியாவிற்கு 1.36பில்லியன் டொலர் என கடன்களை செலுத்தவேண்டிய நிலையில் இலங்கை காணப்படுகின்றது.
இன்று இலங்கை சீனாவின் எக்சிம் வங்கியுடனும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும்இதேவேளை வர்த்தக கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் சீனாவின் வர்த்தக வங்கியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
இலங்கையின் வர்த்தகக் கடன்களில் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட 12.55 பில்லியன் டொலர்களும் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட மேலும் 2.18 பில்லியன் டொலர்களும் அடங்கும்.
இருதரப்பு கடன்வழங்குநர்களிற்கான கடன்களை செலுத்துவதை 2028வரை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என முன்னர் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2042 இல் கடனை மீள செலுத்துவதை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇