மனித வியாபாரத்திற்கு எதிரான மன்றத்தின் (DATF) இரண்டாவது நிகழ்வானது 10.10.2023 அன்று மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் பசன் ரத்நாயக்க தலைமையில் மொனராகலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது AMCOR நிறுவத்தினால் SURECALL அமைப்பின் நிதி உதவியின் கீழ் மனித வியாபாரத்திற்கு எதிரான செயற்பாடுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு செயற்பாடாக தொடர்ச்சியாக நடாத்தப்படுகின்றது.
மனித வியாபாரம் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டலும் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணுதலும் இந்த மன்றத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் AMCOR நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் Y.சிவயோகராஜன், மொனராகலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் U.G.ரஞ்சித், மொனராகலை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி R.M.P நுவங்கா மற்றும் AMCOR நிறுவனத்தின் மொனராகலை மாவட்ட செயற்திட்ட உத்தியோகத்தர் S.H.அப்ராஸ் ஹமீட் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மகளிர் அபிவிருத்தி சிறுவர் பாதுகாப்பு , மற்றும் சிறுவர் உரிமை, இளைஞர் சேவை உளவல ஆலோசனை ஆகியவற்றுக்கு பொறுப்பான மாவட்ட அரசாங்க அதிகாரிகள்.தொழிலாளர் திணைக்கள அதிகாரி,சிவில் சமூக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மனித வியாபாரம் தொடர்பான பிரச்சினைகள், மனித வியாபாரத்தின் தற்போதைய போக்குகளும் அவற்றை தடுக்கக் கூடிய முறைகள் மற்றும் மன்ற நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் பற்றி இவ்வமர்வில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மேற்படி இத்திட்டத்தின் செயற்பாடுகள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய மனித வியாபார எதிர்ப்பு செயலணியின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் AMCOR நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் சரத் பல்லேகம அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇