ஆசிய கிண்ண டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று (19.07.2024) தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு தொடங்கிய ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளது.
இதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், பீ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
போட்டிகளின் முதல் நாளில், நேபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை (20.07.2024) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇