ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் கனடாவின் சார்பில் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த 17 வயது சிறுமியான சம்மர் மெக்கினோஸ் என்ற நீச்சல் வீராங்கனையே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இதுவரையில் மூன்று தங்கப் பதக்கங்களை எந்தவொரு கனேடியரும் ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்றதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் 200 மீற்றர் மெட்லே, 200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லெ ஆகிய நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கனடாவிற்குப் பெருமை சேர்க்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக சம்மர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇