நாட்டில் இந் நாட்களில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவிக்கின்றார்.
அபாயம் காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸ் அத்தியட்சகர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இருந்து பிரதான வீதியில் இன்று (26.06.2024) காலை மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇