இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் அதிகரிப்பாகும்.
இந்த வருட மார்ச் மாதத்தில் இறக்குமதி செலவு 1,637 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
கடந்த வருடத்தை விட இது 8.6 சதவீத அதிகரிப்பாகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










