அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் இன்று (27.06.2024) வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்றும் (27.06.2024) சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (26.06.2024) ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்து, கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
வேதனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கக் கோரி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇