தங்களின் பல கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமையை கண்டித்து மூன்று நாட்கள் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, தொடர்பாடல் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
அரச நிறைவேற்று அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விரைவான தீர்மானங்களை எடுத்துள்ளது.
எங்கள் கூட்டணி பல ஆண்டுகளாக இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி வருகிறது, ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்து தாமதமாகின்றன என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கிராம உத்தியோகத்தர்கள் 26.06.2024 அன்று முதல் மூன்று நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விசேட அரச விடுமுறை நாட்களில் வேலை செய்ய போவதில்லை. எங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்காவிட்டால், மாவட்ட அளவில் போராட்டம் தொடரும் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇