பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றுள்ளதால் வெற்றிடமாக உள்ள சட்டமா அதிபர் பதவிக்கு அவர் பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பதில் சட்டமா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு தடவைகள் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்த போதிலும், அரசியலமைப்பு சபை அந்தப் பரிந்துரையை நிராகரித்திருந்தது.
அதற்கமைய, கடந்த 26ஆம் திகதியுடன் முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇