ஜப்பான் சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய அமைச்சரவை தலைமைச் செயலாளருமான ஹயாஷி யோஷிமாசாவை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜப்பான் நீதியமைச்சர் ரியூஜி கொய்சுமியையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇