நாட்டில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகிய இருவரும் இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
அதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் ஜூலி சங் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை நானும் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளரும் இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடினோம்.
இதன்போது, அவர்களிடம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை மீண்டும் உறுதியளிக்கிறோம்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டை ஆரோக்கியமான மற்றும் நிலையான பாதையில் கொண்டு செல்லவும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்தும் பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇