இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 க்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணி எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் ஒருநாள் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
20 க்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇